தேசிய தொலைக்காட்சி எரிப்பு.. டாக்கா கொழுந்து விட்டு எரிகிறது.. இணையம் முடக்கம்.. பலர் பலி..
பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சிக்கு அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது.
தீ மளமளவென எரிந்ததும் பலர் தீயில் சிக்கியதால் தீயணைப்பு துறையினர் தலையிட்டு அந்த மக்களை மீட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் போராட்டங்களும் , போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளன.
துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களின் விளைவாக, இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்தும் , பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த மக்களின் குழந்தைகளுக்கு முப்பது சதவீத அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசத்தில் இணையதளம் மற்றும் மொபைல் போன் வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.