இணையச் சேவை தடங்கல் – “கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது” – CrowdStrike

உலகளவில் ஏற்பட்டுள்ள இணையச் சேவைத் தடங்கலுக்குக் காரணம் என்று கருதப்படும் CrowdStrike நிறுவனம் பிரச்சினையைச் சீராக்க மும்முரமாய்ப் பணியாற்றிவருவதாய்ச் தெரிவிக்கப்படுகிறது.

இணையச் சேவை தடங்கல் – “கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது” – CrowdStrike இயங்குதளத்திற்கான புதிய பதிப்பில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக CrowdStrike நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் கர்ட்ஸ் (George Kurtz) தெரிவித்துள்ளார்.

Mac, Linux இயங்குதளங்கள் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

அது பாதுகாப்பு அத்துமீறலோ இணைய ஊடுருவலோ அல்ல என்றும் அவர் உறுதியளித்தார்.

கோளாற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

CrowdStrike வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமது குழு பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் CrowdStrike நிறுவனத்தின் பங்குவிலை 20 விழுக்காடு சரிந்துள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள இணையச் சேவை தடங்கலுக்கு CrowdStrike நிறுவனம் தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.