ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
வங்கதேச மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதனி மற்றும் இனோஷி பிரியதர்ஷனி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
112 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு சாமரி அத்தபத்து மற்றும் விஷ்மி குணரத்ன ஆகியோர் வெற்றிகரமான ஆரம்பத்தை வழங்கினர்.
சாமரி அத்தபத்து 12 புள்ளிகளையும், விஷ்மி குணரத்ன 51 புள்ளிகளையும், ஹர்ஷிதா மாதவி 33 புள்ளிகளையும் பெற்று இலங்கை மகளிர் அணிக்கான பாதையை திறந்து வைத்தனர்.
அதன்படி, இலங்கை மகளிர் அணி 17 ஓவர்கள் ஒரு பந்து முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக் கோட்டை கடந்தது.