காலி மற்றும் மாத்தறையில் இருந்து வந்து வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

வவுனியா தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 யுவதிகளை கைது செய்ய முடிந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவிற்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் தங்கும் வசதி ஒன்றை நடத்துவதாக கூறி சில காலமாக இந்த விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்ததாகவும் பொலிஸாரினால் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு யுவதிகளையும் வீட்டின் உரிமையாளரையும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.