ரணிலின் 4 மோசடி பைல்கள் எம் கையில் : அனுரவை பார்த்து ஜனாதிபதி பயப்படுகிறார் : வசந்த சமரசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு பல்வேறு உத்திகளை கையாள்கின்றார் எனவும் எனினும் தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் அவரை தோற்கடிப்பார் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய சேனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க செய்த மோசடி மற்றும் ஊழல் தொடர்பான நான்கு கோப்புகள் தமது கட்சியிடம் இருப்பதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச பிரதிநிதித்துவப்படுத்தும் பாதி குழுவான யானையும் , உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பங்களித்தால், தேசிய மக்கள் சக்தி அனைவரையும் ஒன்றிணைத்து அவர்கள் அனைவரையும் தோற்கடிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.