அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மொட்டு கட்சிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி.

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என, ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (22) உறுதியளித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 22ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கூடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை நடத்துவதற்கு ஆதரவளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க தாம் தயாராகி வருவதாக எதிர்கட்சிகள் கருத்து வெளியிட்டாலும் தாம் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலம் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த கடினமான காலத்தை நாடு தற்போது கடந்துள்ளதாக தெரிவித்தார்.

தமது அரசாங்கம் செயற்பட்டு நாட்டுக்கு அதை காட்டியுள்ளதாகவும் , எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய குழுக்கள் இன்னமும் பேசிக் கொண்டே இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.