சமூகத்தில் கொரணா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதால் புதிய தீர்மானங்கள்.
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது
2ம் தவணை விடுமுறை நாளை ஆரம்பிக்கும் – கல்வி அமைச்சு
கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை நாளை முதல் மூட நடவடிக்கை
களனி பல்கலை, விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வியகம் பூட்டு
மஹர, நீர்கொழும்பு சிறைகளை பார்வையிட தடை இரண்டாம் தவணை விடுமுறை
முன்பள்ளிகளுக்கும் பூட்டு விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் வெளியேறும் பகுதிகள் மூடல்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மூடப்படும் – மகளிர் விவகார அமைச்சர் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு உடனடியாக அறியப்படுத்துமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
மீள் அறிவித்தல் வரை பஸ்களில் ஆசன இருக்கைகளின் எண்ணிக்கைகளுக்கு அமையவே பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
நாளை எந்த அரச நிறுவனத்திலும் பொதுமக்கள் சேவை இடம்பெறாது.