நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட ஹிருணிகா தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்ற விதம் (Video)

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் நேற்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரது பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையும், அறுபதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது கணவரும் பிள்ளைகளும் வந்திருந்தனர்.

நான் அனைவரும் போல 60 பெண்களுடன் சிறையில் சாதாரண செல்லில் 25 நாட்களை கழித்தேன். வெளியில் என்ன நடக்கிறது என அறிய முடியவில்லை. என்னால் எந்தவொரு நிலையிலும் வாழ பழகியுள்ளதால் , இது எனது அரசியல் வாழ்வுக்கு ஒரு நல்ல அனுபவம். எனக்காக வெளியிலிருந்து பிராத்தனைகள் செய்த அனைவருக்கும் நன்றி என சிறையிலிருந்து வெளியே பிணையில் வந்த ஹிருணிகா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.