ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

அரச பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்ககளாக கடமையாற்றுவோரை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, உரிய அதிகாரிகளை விசேட நேர்முகப் பரீட்சைக்கு அனுப்பி தகைமைகளைப் பூர்த்தி செய்யும் அனைவரையும் , ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சட்டமா அதிபர் நேற்று (22) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் சமர்பிப்பார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களுக்கு தீர்வு காணுமாறு கோரி மனுக்கள் கோரப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.