எங்கள் ஆட்சியில் பார்த்துக்கொள்வோம் என ஊடகவியளார்களுக்கு திசைகாட்டி மிரட்டல் : உதய கம்மன்பில கண்டிப்பு.
இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு ஜே.வி.பி விடுத்துள்ள அச்சுறுத்தல்களை இகழ்ச்சியுடன் கண்டிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு ஜனதா விமுக்தி பெரமுனா விடுத்துள்ள அச்சுறுத்தல்களை வெறுப்புடன் கண்டிக்கிறோம்!
ஜே.வி.பி.க்கு அச்சுறுத்தல்களும் , அடக்குமுறைகளும் அறிமுகமில்லாதவை அல்ல, ஆனால் அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலில் முதலாம் இடமும் , இரண்டாம் இடமும் அதுதான் என்பதை இலங்கை மக்களுக்கு நினைவூட்டி, ஊடகவியலாளர்களுக்கு ஜே.வி.பி விடுக்கும் அச்சுறுத்தல்களை இகழ்ச்சியுடன் கண்டிக்கிறோம்.
1987-89 பயங்கரவாத காலத்தில், ஜனதா விமுக்தி பெரமுனா காட்டாட்சி செய்தது . அவர்கள் நாட்டின் அனைத்து குடிமக்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். மக்களைக் கொல்வது, அரச சொத்துக்களை எரிப்பது, தமக்கெதிராக கருத்து தெரிவிப்பவர்களின் வாயை வெட்டுவது என்பன அன்றைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் பதியப்பட்டது.
நாட்டின் ஜனநாயகத்தை மலினப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனா, பிரேமகீர்த்தி டி அல்விஸ், டெவிஸ் குருகே, சாகரிகா கோம்ஸ், ரிச்சர்ட் டி சொய்சா போன்ற ஊடகவியலாளர்களைக் கொன்றது.
ஜனதா விமுக்தி பெரமுன தனது இரத்தம் தோய்ந்த கடந்த காலத்தை திசைகாட்டியின் முகமூடியால் மூடிக்கொண்டு மீண்டும் முன்னுக்கு வர முயற்சித்த போதிலும், அவர்கள் இன்று வெளியிடும் சில அறிக்கைகள், அவர்கள் பாசிசக் கருத்தாக்கங்களிலிருந்து விலகவில்லை என்பதையே காட்டுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த, ஊடகவியலாளர்களான சமுதித சமரவிக்ரம மற்றும் ஹட்சன் சமரசிங்க ஆகியோரை குறிவைத்து வெறுக்கத்தக்க வகையில் கருத்து வெளியிட்டார்.
காலை நேரத்தில் தொலைக்காட்சிகளில் செய்தித்தாள் வாசிக்கும் போக்கிரிகளை அடுத்த தேர்தலின் பின்னர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும், அந்த நாடுகளில் உள்ள திசைகாட்டி ஆதரவாளர்கள் அவர்களை கவனித்துக்கொள்வார்கள் என்றார்.
அதனையடுத்து, சமுதித சமரவிக்ரம வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர் JVP செயற்குழு உறுப்பினர் கே. டி. லால்காந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டதாக உணர்ந்தவுடனேயே, திசைகாட்டி என்ற பாசிச கும்பல், சமூகத்தில் பொறுப்புள்ள பத்திரிக்கையாளர்கள் உட்பட, ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்களோ என்று தோன்றுகிறது.
2022ல் தோல்வியடைந்த போராட்டத்திலும் கூட, அரசியல் எதிரிகளை அச்சுறுத்தி, வீடுகள், உடைமைகளை எரித்து அவர்கள் நடத்திய வன்முறைச் செயல்பாடுகள் இதற்கு மற்றொரு சான்றாகும்.
இலங்கையில் எந்தவொரு அரசியல் தலைவர் அல்லது அத்தகைய தலைவரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் ஜனநாயக ரீதியில் கருத்துக்களை வெளியிடவும், மக்களுக்கு தெரிவிக்கவும், உரையாடலில் ஈடுபடவும் ஊடகவியலாளர்களின் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அந்த உரிமைகளை மீறும் ஜே.வி.பியின் இந்த கொடூரமான முயற்சியை நாங்கள் கடுமையாக வெறுக்கிறோம். கண்டிப்போம்.
தமக்கு அதிகாரம் கிடைக்கும் என நினைத்து , ஊடகவியலாளர்கள் மீது வெறுப்புடன் செயற்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவிற்கு அதிகாரம் வழங்காமல், புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்விற்காக அனுப்பிவைக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் மக்களை ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தேசபக்தியால்
பிவித்துரு ஹெல உறுமய
உதய கம்மன்பில
தலைவர்