ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்கவும்… நிதியமைச்சகத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகளை தாமதமின்றி வெளியிடுமாறு ஜனாதிபதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செலவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 45 பொலிஸ் பிரிவுகளில் இருந்து தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.