கட்சிகளை பிளவுபடுத்தும் பழக்கத்தில் ரணில் மொட்டிலும் முயற்சிக்கிறார்… தேவையான அரசியல் முடிவை எடுப்போம்… நாமல்.
தகாத செயல்களை செய்தாலும் ஒரு வார்த்தை கூட மறுப்பு தெரிவிக்காமல் அரசாங்கத்திற்கு முழுமையாக ஆதரவளிப்பது கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததோடு , அந்த முயற்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியை உடைத்து பதிலளித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க கட்சிகளை உடைக்கும் அரசியல்வாதி எனத் தெரிவித்த அவர், அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தபோது இந்தப் பழக்கம் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாட்டின் நலன் கருதியே ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக பொஹொட்டுவ நியமித்ததாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியை உடைக்கும் பழக்கம் குறித்து தமக்கு கோபம் இல்லை என தெரிவித்த நாமல் ராஜபக்ச, கட்சியை பாதுகாத்துக்கொண்டு தேவையான அரசியல் தீர்மானத்தை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.