பதில் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட மாட்டார்..- ஜனாதிபதி.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கடமையாற்றும் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமித்தால், தனக்கு எதிரான பிரச்சனை வரலாம் என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது.
இதன்படி, இந்த விடயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனென்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு மட்டுமே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லாத நிலையில் , ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி நடந்திருப்பது, பொலிஸ் மா அதிபர் பணியை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்பட்டு உள்ளதாகவே சட்டத் துறைகள் கருதுகின்றன.