தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை : காணாமல் போன தமிழர் என போராடிய விக்கிரமபாகு ஓய்வு எடுத்துக் கொண்டார் (Video)

விக்கிரமபாகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு உலகளாவிய அறிவுஜீவியாக சிறப்பு பொறியியல் முனைவர் பட்டத்துடன் இலங்கைக்கு வந்தார்.

அப்போதிருந்து, அவர் தனது சிறந்த கல்வியை பிரபலம் அல்லது செல்வத்தைப் பெறுவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தவில்லை, ஆனால் அவர் ஆரம்பம் தொட்டே இடது மனசாட்சியின் அரசியலில் நுழைந்தார்.

பின்னர் 78 ஜே. ஆர். ஜயவர்தனவின் புதிய அரசியலமைப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர் அப்போதைய அரசாங்கத்தால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் அவரது பதவியைக் கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் , தனது இடதுசாரி அரசியலை கொண்டு செல்லத் தொடங்கினார்.

அடுத்து, 88-89ல் இடதுசாரிகளாக பிரதிநிதித்துவப்படுத்திய ஜே.வி.பி.யின் கிளர்ச்சியாளர்கள் கட்சிக்கு வெளியில் இருந்த இடதுசாரிகளை கொன்று குவித்தபோது, ​​விக்கிரமபாகுவும் ஜே.வி.பி.யினரால் சுடப்பட்டு ,மயிரிழையில் உயிர் தப்பினார். அப்போதும் நிலவிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அவதூறு ஏற்படுத்தாமல் காணாமல் போனவர்களுக்காகவும் தொடர்ந்து பொது வெளியில் தோன்றி வந்தார்.

இந்த வரலாற்றின் இன்னொரு தருணத்தில், சிங்கள பௌத்த ஒற்றையாட்சிக்கான தமிழின விரோத இரத்தப்போரில் முழு தெற்கே பங்காளியாக இருந்த ஒரு முட்டாள்தனமான தீர்மானத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும், காணாமல் போன தமிழர்கள் தொடர்பாகவும் அவர் தனியாகத் தோன்றினார்,

அதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இனவாத இராஜபக்ஷ குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருந்தது.

அவருடன் அரசியலில் இருந்த சமகாலத்தவரான வாசு, ராஜபக்ச அலையோடு சிக்கி, நொறுங்கி, அழுகிப் போன நேரமான , மிக இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் தனது தத்துவத்தை நிலைநாட்டினார்…

பழைய இடதுசாரிகள் மற்றும் ஜே.வி.பியிரும், நாடாளுமன்றவாதத்திலும் விழுந்து உருகும் போது, அதே பழைய சிவப்புச் சட்டையுடன் ஒளிவீசும் நட்சத்திரமாக தன் சித்தாந்தத்தில் அசையாமல் இருந்தார்.

மேலும், இடதுசாரி சக்திகள் பல வீரவன்ச பாணியில் வீழ்ந்து இனவாத அரசியலில் சிக்குண்டு கிடந்த சூழலில், இலங்கையில் சோசலிசத்திற்கு முன் , முதலாளித்துவம் வரவேண்டும், அதற்காக பெரும் மூலதனம் இலங்கைக்கு வரவேண்டும் என்பதை புரிந்துகொண்ட ஒரே உண்மையான சோசலிஸ்ட் இவரேயாகும்.

உண்மையில், அவர் ஒரு தனிமனிதர் மட்டுமல்ல, இடதுசாரிகளின் ஒரு அத்தியாயமும் சகாப்தமும் ஆகும்…

அந்த சகாப்தமும் இப்போது முடிந்துவிட்டது.. !

~ பிரியஷாந்த ராஜபக்ஷ

https://youtu.be/spBXxT5dVf0x

Leave A Reply

Your email address will not be published.