ராஜபக்ச அரசு படுமுட்டாள் அல்ல; ரிஷாத் வந்தால் துரத்திவிடுவோம்.
ராஜபக்ச அரசு படுமுட்டாள் அல்ல;
ரிஷாத் வந்தால் துரத்திவிடுவோம்!
– அமைச்சர் விமல் ஆவேசம்
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைச் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு ராஜபக்ச அரசு படுமுட்டாளானது என்று நாம் எண்ணவில்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எந்தவொரு அரச நிகழ்வுக்கும் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து கலந்துகொள்வதற்கான சிறப்புரிமை அவர்களுக்கு இருக்கின்றது.
வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்வொன்றில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டமையானது அவர் முழுமையாக அரசில் சேரப்போகின்றார் என்று அர்த்தப்படாது. அவ்வாறு திரிபுபடுத்தவும் கூடாது.
நாங்கள் உருவாக்கியிருக்கும் அரசில் நாங்கள்தான் இருப்போம். அதில் ரிஷாத் இணைவதற்கு வந்தால் துரத்திவிடுவோம்” – என்றார்.