மொட்டுவின் முடிவை நாளை அறிவிப்பேன் – மஹிந்த தகவல்.

வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறக்குவதா அல்லது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படுமா என்பது தொடர்பில் கட்சியே தீர்மானிக்கும் என்றும் மஹிந்த குறிப்பிட்டார்.

கட்சியால் எடுக்கப்படும் முடிவு தன்னால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மஹிந்த மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.