தினசரி வழக்குகள் தேவையில்லை … உண்மையான போதை கடத்தல்காரர்களை குறிவைத்து “யுக்திய” நடவடிக்கையை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு!
இதுவரை கைது செய்யப்படாத உண்மையான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் போதைப்பொருள் வலையமைப்புகளை இலக்கு வைத்து நீதி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர்கள் , பிரதிப் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தினமும் பிடிபடுவதாகச் சொல்லப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தரவுகள் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையான குற்றவாளிகளை குறிப்பிட்ட கால அவகாசத்துடன் திட்டமிட்டு கைது செய்யாமல், அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி , போதைப்பொருளை வைத்து சாதாரணமானவர்களை குற்றவாளிகள் ஆக்கப்பட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எவரிடமிருந்தும் இனி வரக் கூடாது என பொலிஸ் நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதற்காக , எவரையாவது ஏமாற்றி கைது செய்யும் எந்தவொரு சட்டவிரோத பொலிஸ் உத்தியோகத்தரையும் யாரும் காப்பாற்ற முன்வர வேண்டாம் எனவும், கௌரவமாக கடமையாற்றுமாறும், மாவட்ட மற்றும் மாகாண பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பொலிஸாரால் போதைப்பொருளை வைத்து தவறிழைக்காத நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அதிகளவான பொதுமக்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதின் பின்னணியிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஒரு பொலிஸ்காரர் , போதை பக்கட் ஒன்றை வைத்து , சில இளைஞர்களை குற்றவாளியாக்க முற்பட்ட சம்பவம் சமூக வலைத் தளங்களில் பிரலயம் போல வைரலானது. அதன் தாக்கமே , இப்படியான மாற்றத்துக்கு காரணமாகியுள்ளது.
இந்த அறிக்கை தினசரி இத்தனை வழக்குகள் பதியப்பட வேண்டும் என ஒரு மறைமுக உத்தரவு காரணமாக , இப்படியான நீதிக்கு விரோதமான கைதுகள் நடந்துள்ளன என பொது மக்களால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.