மொட்டு கூட்டத்துக்கு வந்தவர்களில் எம்.பி.க்கள் 16 பேர் மட்டுமே : தம்மிக்க பெரேராவுக்கும் வாய்ப்பு இல்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து மொட்டு சின்னத்தில் தனி வேட்பாளரை நிறுத்த இன்று (29) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை கூட்டத்தில் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நியமிக்க வேண்டும் என்ற யோசனை கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தால் அரசியல் பீரோவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.


மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உடுகொட, கோகில ஹர்ஷனி குணவர்தன, சஹான் பிரதீப், ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க கனக ஹேரத், மொஹான் பிரதர்ஷன, ஜானக வக்கம்புர ஆகியோர் கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்கும் யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் பொருத்தமான வேட்பாளரை இறக்குவோம் – மொட்டு செயலாளர்

எவ்வாறாயினும், மொட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த தம்மிக்க பெரேராவின் பெயர் , பொலிட்பீரோ கூட்டத்தில் குறிப்பிடப்படாமை விசேடமான ஒன்றாக இருந்தது.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், வெற்றிபெறக்கூடிய பொருத்தமான வேட்பாளர் முன்வைக்கப்படுவார் என்றார்.

இது கட்சியின் தீர்மானம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்று வரை ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் , மொட்டு சின்னத்தில் தனி வேட்பாளரை அபேட்சகராக நிறுத்த இன்று பொலிட்பீரோ தீர்மானித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.SLPP 2024.07.29

Leave A Reply

Your email address will not be published.