கேரளத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நிலச்சரிவு!
கேரள மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் மங்களூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று அதிகாலை கேரளத்தின் வயநாட்டில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 85 பேர் வரை பலியாகியுள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கர்நாடகத்தின் மஞ்களூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷீரடி காட் சக்லேஷ்பூர் டோடா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக அரசு தடை செய்துள்ளது.