நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று.
ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை தமன்னாவுக்கு கொரோனா – ஆஸ்பத்திரியில் அனுமதி
தமன்னா
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அந்த வகையில், ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தமன்னா.
இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் படிக்காதவன், பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி, KGF போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து தனது திறமையை தமிழ் சினிமாவுக்கு வெளிப்படுத்தியவர்.
இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு திடீரென்று தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதற்கு முழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமன்னாவின் ரசிகர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர், விரைவில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.