கனடா கனவு கலைந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனுக்கு நடந்த சோகம் மரண விசாரணையில் தெரிய வந்தது.
கனடாவில் வேலைக்குச் செல்வதற்காக 02 மில்லியன் பணத்தைக் கொண்டு வந்த போது காணாமல் போன நிலையில் வவ்னிகுளம் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டுள்ளதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வங்கியில் இருந்து 2 மில்லியன் ரூபா பணத்தோடு வீடு திரும்பிய போது காணாமல் போன நிலையில் நேற்று (31) வவுனிக்குளம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் பிரேத பரிசோதனையில் வாலிபரின் கழுத்தை நெரித்து ஏரியில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது.
கனடாவுக்கு வேலைக்காக செல்வதற்காக வங்கியொன்றில் இருந்து இருபது இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பிய முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞரின் சடலம் வவுனிக்குளம் குளத்தில் மீட்கப்பட்டது.
அவருடைய சாரம், மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஜோடி காலணி என்பன குளக் கரையின் ஓரிடத்தில் காணப்பட்டதையடுத்து, இந்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு பல சந்தேகங்கள் இருந்ததால், சம்பவம் தொடர்பில் பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மரணத்தில் பெரும் சந்தேகம் இருப்பதாகவும் சடலத்தை அடையாளம் கண்ட குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலையின் சட்ட வைத்தியரால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு அந்த இளைஞனின் மரணம் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பதாகவும், இறந்த பிறகு சடலம் ஏரியில் வீசப்பட்டிருப்பதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
பின்னர் முல்லைத்தீவு நீதவான் எஸ்.எச்.மக்ரூஸ், இளைஞனின் சடலத்தை இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும், இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.