பவித்ரா வீட்டில் இரகசிய வாக்கெடுப்பு : முடிவுகளை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தனது அரசியல் செயற்பாட்டாளர்களை அழைத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் கருத்துக் கேட்டுள்ளார்.
நேற்றைய தினம் பெல்மடுல்லவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைக்கப்பட்ட இந்த செயற்பாட்டாளர்களினால் இரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் முடிவுகளை அறிவிக்காத பவித்ரா வன்னியாராச்சி தனது பயணப் பையில் முடிவுகளை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு புறப்பட்டுள்ளார்.
வாக்களிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பிளவுபடுத்தாமல் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலை சந்திக்குமாறு அமைச்சரிடம் அரசியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.