மொட்டு வேட்பாளர் தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

இது தொடர்பான நிறுவன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் எதிர்வரும் நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இந்த வாரத்திற்கு முன்னர் அறிவிக்கத் தயாராக இருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக அது தாமதமானது.

ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கும் நால்வர் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் தம்மிக்க பெரேராவுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.