மொட்டுகளிடையே காலியில் யுத்தம்! ரணிலின் ரமேஷ் – பசிலின் சாகர மோதல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் காலி மாவட்டத்தில் உள்ள மொட்டு கட்சியின் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் குழுவும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காத குழுவும் தனித்தனியாக மாவட்ட அதிகார சபைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட தலைவரும், ஜனாதிபதியை ஆதரிக்கும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சருமான டொக்டர் ரமேஷ் பத்திரன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட சபை கூட்டத்தை எதிர்வரும் 3ஆம் திகதி அக்குரல பிரதேசத்தில் உள்ள காலி ஹோட்டலில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்தின் ஆலோசனையின் பேரில், பொஹொட்டுவ ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை ஆதரிக்கும் குழுவினர், பொஹொட்டுவ மாவட்ட நிர்வாக சபைக் கூட்டத்தை இம்மாதம் 4ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு வதுரம்ப பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொஹொட்டுவ காலி மாவட்ட சபை கூட்டத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளைக் கலந்து கொள்ள வேண்டாம் என கட்சி அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவாக அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பி.டி சில்வா, இம்மாதம் 4ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு மொட்டு ரத்கம பிரதேச சபைக் கூட்டத்தை , அவரது வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.