நடுக்கடலில் மயங்கிய இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள்

நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவரைப் பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வந்த நாகை மீனவர்கள், அவரை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி இரவு 11 மணிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த ஒரு ஃபைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கி நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரைப் படகுடன் பத்திரமாக மீட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து அவரை சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, கடலோரப் பாதுகாப்பு குழுமக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மீனவர் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த அகமது இர்ஃபான், 41, மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அகஸ்டின் என்பவரும் கடந்த 20 நாள்களுக்கு முன்பு திருகோணமலையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர் என்றும் அப்போது அகமது இர்ஃபானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்தார் என்றும் தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.