பிரிட்டனில் சிறுமிகளின் கொடூரக் கொலை – சந்தேக நபரின் அடையாளம் வெளியிடப்பட்டது.

பிரிட்டனில் 3 சிறுமிகளைக் கத்தியால் குத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பதின்ம வயதினரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

கத்திக் குத்துச் சம்பவத்தில் பிள்ளைகள் உட்பட மேலும் 10 பேர் காயமுற்றனர்.

17 வயது அக்ஸல் ரூடா குபானா (Axel Ruda-kubana) மீது கொலை, கொலை செய்யும் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சந்தேக நபர் பதின்ம வயதினராக இருப்பதால் அவருடைய பெயர் வெளியிடப்பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறானது.

ஆனால் பொய்த் தகவல்கள் பரவுவதைத் தடுக்க, பெயரை வெளியிடுவது அவசியம் என்று நீதிபதி கூறினார்.

சம்பவத்திற்குப் பிறகு வன்முறை நிறைந்த ஆர்ப்பாட்டங்கள் சில நாள்களுக்கு நீடித்தன.

வன்முறை மற்ற நகரங்களுக்கும் பரவியது.

அதைச் சமாளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) புதிய தேசிய ஆற்றல் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

அதிகாரிகள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள திட்டம் உதவும் என்று திரு. ஸ்டாமர் கூறினார்.

முக அடையாளத் தொழில்நுட்பம் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுவதற்கும் அது வகைசெய்யும்.

Leave A Reply

Your email address will not be published.