சேலத்தில் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்
சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டி ஒரு வழிபாடு செய்து வருகிறார்.
சாமிகளுக்கு கோவில் இருப்பதையே இங்கு சிலர் விமர்சித்து வருகிறார்கள். அது ஒவ்வொருவரின் கொள்கை சார்ந்த விஷயம். அவ்வாறான சூழலில் சிலர் நடிகைகளும் கோவில்களை கட்டியுள்ளார்கள்.
குஷ்புவிற்கு நம் ஊரில் கோவில் கட்டினார்கள். அதே போல ரஜினிக்கு, பிரதமர் மோடிக்கும் கர்நாடகாவில் கோவில் உள்ளது. இதனை விட நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயமொன்று இங்கு நடந்துள்ளது. அதாவது சேலத்தில், நபர் ஒருவர் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
சேலம் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் இக்கோவிலை கட்டியுள்ளார். ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் எனப்படும் இக்கோவிலுக்கு தினமும் வழிபட வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு முதல் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படுபவரின் ஜீவசமமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எங்குமே ஏலியன் சித்தர் இல்லை என கூறுகிறார் லோகநாதன்.
தற்போது கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும் சூழலால், குறைந்த அளவில் கோவில் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட லோகநாதன், கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த பிறகு, அனைத்து வகை பூஜைகளும் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்.