கழுத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்..விரலில் திருமண மோதிரம்…இரட்டிப்பு மகிழ்ச்சி
ஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிச்சுற்றில் சீனாவைச் சேர்ந்த ஹுவாங் யா சியோங்கும் (Huang Ya Qiong) செங் சிவையும் (Zheng Siwei) தென் கொரியாவை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தனர்.
செட் விவரம்: 21-8, 21-11
தங்கப் பதக்கத்தை வென்ற பின்னர் சீனப் பேட்மிண்டன் அணியைச் சேர்ந்த இன்னொரு விளையாட்டாளர், லியூ யூசென் (Liu Yuchen) தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு ஹுவாங்கின் விரலில் மோதிரத்தை அணிவித்தார்.
ஹுவாங்கினால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
“நான் போட்டிக்காக என்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தினேன். இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இன்று நான் ஒலிம்பிக் வெற்றியாளர். அதோடு யூசென் தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார்,” என்று ஹுவாங் சொன்னார்.
2021ஆம் ஆண்டு தோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹுவாங் யா சியோங்கும் செங் சிவையும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தனர்