போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டு மூவர் பலி : தன்னையும் சுட்டுக் கொண்டாரா?
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கிண்ணியாகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று 04.08.2024 அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, 04.08.2024 அன்று அதிகாலை அதே கிண்ணியாகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 54 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய சிறுமியும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், கரடுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கொலைகளும் தற்கொலை செய்து கொண்ட அதிகாரியால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.