ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவிப்பு.

ரஷ்யாவுக்கு சொந்தமான ரொஸ்டோவ்-நா-டோனு நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடிக்க முடிந்ததாக உக்ரைன் படை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 2 அன்று கிரிமியாவின் செவஸ்டோபோல் துறைமுகப் பகுதியில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கிரிமியாவில் இருந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் தாக்கி அழித்ததாக உக்ரைன் கூறியது.

கிலோ வகையைச் சேர்ந்த ரொஸ்டோவ்-நா-டோனு நீர்மூழ்கிக் கப்பல் கலிபர் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவக்கூடிய ஒரு கப்பலாகும். இது 2023 செப்டம்பர் 13 அன்று சேதமடைந்து பழுதுபார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அது சோதிக்கப்படும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் கூறியது.

எவ்வாறாயினும், ரஷ்யா இது குறித்து எதுவும் கூறவில்லை.

Leave A Reply

Your email address will not be published.