வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு!

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் தலைவர்கள் இன்று இராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதம ஆலோசகராக முகமது யூனுஸின் பெயர், மாணவர் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிரியாக கருதப்படும் 84 வயதான யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்று கூறப்படுகிறது.

தற்போது சுகயீனம் காரணமாக பாரிஸில் சிகிச்சை பெற்று வரும் யூனுஸ் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் விரைவில் வங்கதேசம் திரும்புவார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.