பங்களாதேஷ் ஏன் தலைகீழாக மாறியது? அடுத்த மாற்றாக என்ன ஆட்சி? – பார்வை
ஆகஸ்ட் 5ஆம் திகதி காலை 11.30 மணியளவில் வங்காளதேச பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, மாலை 2.30 மணியளவில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் டாக்காவில் உள்ள கனோ-பவன் எனும் தனது அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி, இராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகரான அகர்தலாவுக்கு வந்தடைந்தார்.
அவரது இறுதி இலக்கு இங்கிலாந்தாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. தற்போது அவர் புது டில்லிக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்காளதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை பற்றி பெருமை பேசியவர்கள், அப்போது வங்காளதேசம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4.7 பில்லியன் டாலர் கடன் பெற்று தனது அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளித்து வந்தது என்பதை அறியவில்லை.
இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக பயன்படுத்தப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி வேகம், தனிநபர் வருமானம், பணவீக்கம் போன்ற அளவுகோல்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பொருந்தாது.
உலகளாவிய சந்தை பொருளாதாரத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதன் முக்கிய நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகத்துடன் நகரத்திற்கு சேர்க்கப்படும் லாபத்தின் அடிப்படையில் கணக்கிடுகிறார்கள்.
இது நாட்டின் வருமானம் என கருதப்படுவது ஏமாற்றுத்தனமானது. அதற்காக பயன்படுத்தப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி வேகம், தனிநபர் வருமானம், பணவீக்கம் போன்ற அளவுகோல்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பொருந்தாது. இது இலங்கை, வங்காளதேசத்திற்கு மட்டுமல்லாமல், மிகப்பெரிய பொருளாதாரங்களாக பேசப்படும் இந்தியா மற்றும் சீனாவிற்கும் பொருந்தும்.
வங்காளதேசத்தின் அரசாங்க மாற்றமும் அத்தகைய கடுமையான ஏற்றத்தாழ்வுகளால் பல ஆண்டுகளாக இன மற்றும் மத அடிப்படைவாத இயக்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களின் அதிருப்தி மற்றும் எதிர்ப்புகள் வெளிப்பட்டதன் விளைவாகும்.
குறிப்பாக நகர்ப்புற சமூகத்தின் கீழ் அடுக்குகளில் கொதித்துக் கொண்டிருந்த நெருக்கடி. ஆனால் பொருளாதார வளர்ச்சியுடன் வங்காளதேசத்தின் வறுமையும் அதிசயமாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 2.15 டாலருக்கும் குறைவாக சம்பாதித்த 40 சதவீதத்திற்கும் அதிகமான ஏழைகளின் விகிதம் 2022ல் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. வறுமையை ரூபாய் காசுகளுக்கு (பணத்திற்கு) மட்டுப்படுத்தும்போது ஏற்படும் குழப்பத்தை வங்காளதேசம் இன்று சிறப்பாக விளக்கியுள்ளது.
யுனிசெஃப் நிறுவனத்தின் கூற்றுப்படி, வங்காளதேசத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு மிக அதிகமாக உள்ளது. 28 சதவீத குழந்தைகள் குள்ளமாக உள்ளனர். மேலும் 10 சதவீதம் பேர் உடல் ரீதியாக தேய்வடைகின்றனர். நகர்ப்புற குடிசைப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெண்களிடையே கல்வியறிவின்மையும் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய குடும்பங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடும் அதிகமாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்காளதேச புள்ளிவிவர பணியகம் 2022ல் நடத்திய குடும்ப வருமானம் மற்றும் செலவு ஆய்வின்படி, தேசிய வருமானத்தில் 30.04 சதவீதத்தை பணக்கார குடும்பங்களின் 5 சதவீதம் பெறுகின்றன. அதற்கு மேலாக, வங்காளதேசத்தின் பணக்கார குடும்பங்களின் 10 சதவீதம் தேசிய வருமானத்தில் 40.92 சதவீதத்தை அனுபவிக்கின்றன. அவர்களின் ஏழை குடும்பங்களின் 50 சதவீதம் தேசிய வருமானத்தில் 19.05 சதவீதத்தை பெறுகின்றன.
இந்த ஏழை குடும்பங்களின் 50 சதவீதம் பெறும் சொற்ப வருமானம் தினசரி 2 டாலருக்கு சற்று அதிகமாக இருக்கும்போது அவர்கள் ஏழைகளாக கருதப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தேசிய வருமானத்தில் நியாயமான பங்கை மட்டுமல்லாமல் இழக்கின்றனர்.
கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அரசு சேவைகள் பொது வசதிகளும் கூட அவர்களுக்கு பெருமளவில் மறுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு போதுமான தினசரி உணவு கிடைக்காத 37.7 மில்லியன் நபர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற சமூகம் சுதந்திர தேசிய பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டு, அதன் விளிம்பில் தங்கியிருக்கும் அத்தகைய நசுக்கப்பட்ட ஏழை சமூக அடுக்கைச் சேர்ந்தவர்கள். அதிலிருந்து வெளியேற, குழந்தைகளுக்கு அரசு வேலை பெறும் எதிர்பார்ப்புடன், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர்.
அத்தகைய தியாகங்களின் முன் அவர்களின் வறுமை மேலும் கொடூரமாகிறது. இந்த வங்காளதேச கிளர்ச்சி அவர்களின் கிளர்ச்சி. அவர்களின் குழந்தைகளின் கிளர்ச்சி.
ஜூலை 1 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். பிரதமர் ஹசீனா அதற்கு மிகவும் கடுமையான அடக்குமுறையுடன் பதிலளித்தார்.
மாணவர் போராட்டங்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களுக்கு அவரது அவாமி லீக் கட்சியின் இளைஞர் அமைப்பான “சத்ரா லீக்கையும்” பயன்படுத்தினார்.
முதல் வாரத்தில் அரசாங்கத்தின் ஆயுதப்படை அடக்குமுறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது.
அதனுடன் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்புற சமூகத்தின் கீழ் அடுக்குகளின் பிரதிநிதித்துவமும் மாணவர் எதிர்ப்புடன் இணைந்தது.
போராட்டங்களுக்கு எதிராக தேவையற்ற கடுமையான அடக்குமுறைக்கு பிரதமர் ஹசீனா வழிநடத்தப்பட்டது இராணுவ புலனாய்வுப் பிரிவின் மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகளால் என்று இந்திய அரசியல் விமர்சகர்களிடையே கருத்து நிலவுகிறது.
இது கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது, பிரதமர் ஷேக் ஹசீனா 2024 ஜூன் மாதத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு வேலை ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
இது அவரது தந்தை, வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் முதல் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1972இல் விடுதலைப் போராளிகளுக்காக தொடங்கிய வேலைவாய்ப்பு சலுகையாகும்.
அவ்வப்போது திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 30 சதவீத வேலை ஒதுக்கீட்டிற்கு தேசிய பொருளாதாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் அதன் விளிம்பில் நிற்கும் சமூகப் பிரிவுகளின் புதிய தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், விடுதலைப் போராட்டத்தின் பழைய போராளிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கான சலுகையாக இதைப் பாதுகாக்க தேசபக்தி வண்ணத்தையும் கொடுத்தனர். எனினும், 2018 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் இந்த புதிய இளம் வாக்குகளுக்காக, 2018 மார்ச்சில் பிரதமர் ஷேக் ஹசீனா விடுதலைப் போராளிகளின் 30 சதவீத வேலை ஒதுக்கீட்டை ரத்து செய்தார்.
பிரதமர் ஹசீனாவின் இந்த முடிவுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தின் பழைய போராளிகளின் குடும்பங்கள் சில நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களுக்காக அதை தங்கள் குடும்பங்களுக்கு வழங்குமாறு கோரினர்.
அதன்படி, நீதிமன்றம் 30 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக 2024 ஜூன் தொடக்கத்தில் தனது தீர்ப்பை வழங்கி அதை மீண்டும் உறுதிப்படுத்தியது, பிரதமர் ஹசீனா அதை அமல்படுத்தினார்.
ஜூலை 1 ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர்
அதை மீண்டும் அமல்படுத்துவதற்கு எதிராக ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஜூலை 1 ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். பிரதமர் ஹசீனா அதற்கு மிகவும் கடுமையான அடக்குமுறையுடன் பதிலளித்தார். மாணவர் போராட்டங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அவரது அவாமி லீக் கட்சியின் இளைஞர் அமைப்பான “சாத்ரா லீக்கையும்” அவர் பயன்படுத்தினார். முதல் வாரத்தில் அரசாங்கத்தின் ஆயுதப் படை ஒடுக்குமுறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. அதனுடன் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்புற சமூகத்தின் கீழ் அடுக்குகளும் மாணவர் எதிர்ப்புடன் இணைந்தன.
போராட்டங்களுக்கு எதிரான தேவையற்ற கடுமையான அடக்குமுறைக்கு பிரதமர் ஹசீனாவை இராணுவ புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகளும் இராணுவமும் வழிநடத்தியதாக இந்திய அரசியல் விமர்சகர்களிடையே இப்போது கருத்து நிலவுகிறது
ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கமே முக்கிய முழக்கமாக மாறியது.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி வங்காளதேச உச்ச நீதிமன்றம் ஒதுக்கீட்டு சதவீதத்தை திருத்தி, தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பு சதவீதம் 93% என்று தீர்ப்பளித்தது. ஆனால் அப்போது மிக மோசமான எதிர்ப்பு அரசு அடக்குமுறையால் இறந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பாக இருந்தது.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கமே முக்கிய முழக்கமாக மாறியது.
அவர் பிரதமர் பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நேரத்தில் 300 பேர் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
வங்காளதேசம் கற்பிக்கும் கடுமையான அரசியல் பாடத்தை சுருக்கமாகக் கூறினால் அது இவ்வாறு இருக்கும். சுதந்திர சந்தை பொருளாதாரம் என்பது “வளர்ச்சி” திட்டம் அல்ல.
இது வெறுமனே ஒரு போட்டி சந்தை. அந்த நகர்ப்புற சந்தையில் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக கைவிடப்படுகிறார்கள்.
இது இயல்பாகவே ஊழல் நிறைந்தது, சுதந்திர சந்தை பொருளாதாரத்தால் கைவிடப்பட்ட பெரும்பான்மையான மக்களை மத மற்றும் இன ஆதிக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் அரசியலை பராமரிப்பது. இருப்பினும், ஏழை பணக்கார இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் போது, பெரும்பான்மையான மத, இன தேசிய உணர்வுக்கு அந்த மக்களை கட்டுப்படுத்த முடியாத போது, தீர்வாக ஆட்சியாளர்களுக்கு மீதமுள்ளது அடக்குமுறை மட்டுமே.
அத்தகைய சந்தை பொருளாதாரத்தில் வாழ்வதற்கான அர்த்தம் இன்னும் இருக்கிறதா என்ற கேள்வி நிர்வாணமாக ஏழை சமூகத்தின் முன் எழும்போது, அவர்கள் அடக்குமுறையை பொருட்படுத்தாமல் அரசாங்கத்தை வெளியேற்ற பின்வாங்க மாட்டார்கள்.
அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான பதில்கள் இல்லாமல் தெருவில் இறங்கும் போராட்டங்கள் அத்தகைய நாடுகளில் அடுத்த மாற்றாக இராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதுதான்
வங்காளதேசத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் என்னவென்றால், அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான பதில்கள் இல்லாமல் தெருவில் இறங்கும் போராட்டங்கள் அத்தகைய நாடுகளில் அடுத்த மாற்றாக இராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதுதான். நேற்று (ஆகஸ்ட் 5) இரவு ஜெனரல் வாகர்-உஸ்-சமான் தலைமையில் இடைக்கால ஆட்சி நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் பெரேரா
மூத்த அரசியல் விமர்சகர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்
தமிழில் : ஜீவன்