பங்களாதேஷ் போராட்டம் போல் இங்கும் செய்ய முயற்சித்தோம்.. நூலிழையில் தவறவிட்டோம்..- லால் காந்த (Video)

பங்களாதேஷ் போராட்டம் போன்று இந்த நாட்டின் பாராளுமன்றத்தை கைப்பற்ற கடந்த போராட்டத்தின் போது சந்தர்ப்பம் ஏற்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய பின்னர், போராட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தை நோக்கி திருப்பியிருக்க வேண்டும். நாங்கள் பாராளுமன்றத்தை நோக்கி போனோம். அங்கே இறங்கினோம். தமது கட்சி முன்முயற்சி எடுத்த போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் என்று சொல்லிக் கொண்ட பல்வேறு தரப்பினர் அதை தடுத்தார்கள்.

அதனால், இடிந்து விழுந்த பாராளுமன்ற கோபுரத்தின் எஞ்சிய பகுதிகளால் மீண்டும் அது மீள் உருவாக்கப்பட்டது.

இறுதியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி கதிரையிலிருந்து இறக்கிவிட்ட போராட்டத்தால் ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லாமல் போனது என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் ஆதம் தொழில் வல்லுநர்களின் 16வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.