வங்கதேச போராளிகள் சிஸ்டம் சேன்ஞ் என 24 பேரை உயிருடன் எரித்தனர் (Video)

வங்கதேச தீவிரவாதிகளால் நட்சத்திர வகுப்பு ஹோட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இது அந்நாட்டு அவாமி லீக் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், உள்ளே இருந்த இருபத்தி நான்கு பேர் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் இந்தோனேசிய பிரஜை ஒருவரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருபத்தி நான்கு இறந்த உடல்கள் ஏற்கனவே மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் பல சடலங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக உயிரைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோட்டலின் தரை தளத்தில் அடையாளம் தெரியாத கும்பல் தீ வைத்ததால், தீ வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது.

Leave A Reply

Your email address will not be published.