ஷேக் ஹசினா இந்தியாவில் : உறுதிசெய்தது புதுடில்லி.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் இருப்பதைப் புதுடில்லி உறுதிப்படுத்தியுள்ளது.
“பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவிற்கு வர அனுமதி கேட்டார்.. குறுகிய கால அறிவிப்பில். அதே நேரத்தில் பங்களாதேஷ் அதிகாரிகளிடமிருந்து விமானம் தரையிறங்க கோரிக்கை வந்தது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் நேற்று (6 ஆகஸ்ட்) தெரிவித்தார்.
நிலைமையை அணுக்கமாகக் கவனித்துவருவதாயும் , பங்களாதேஷ் சர்ச்சை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாகவும்
அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்திய எல்லையோரக் காவற்படைகளை உயர்விழிப்புநிலையில் இருக்கும்படி அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
தென்னாசிய நாடுகளில் இந்தியாவுடன் ஆக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஹசினாவின்,
பங்களாதேஷ அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது இந்தியாவிற்குச் சவாலாக அமையலாம்.