ஹமாஸின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார்.
ஹமாஸ், காஸாவின் புதிய தலைவராக யாயா சின்வாரைத் (Yahya Sinwar) தேர்ந்தெடுத்துள்ளது.
ஹமாஸ் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் சென்ற வாரம் கொல்லப்பட்டார்.
அதனையடுத்து இஸ்ரேல் விவகாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை யாயா சின்வாரிடம் ஒப்படைத்ததாக ஹமாஸின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டதில் 61 வயது யாயா சின்வாருக்கு முக்கியப் பங்கிருப்பதாய்க் கூறப்படுகிறது.
காஸாவின் தெற்குப் பகுதியின் கான் யூனிஸ் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர் யாயா சின்வார்.
அவர் 2017ஆம் ஆண்டில் காஸாவில் ஹமாஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இரக்கமின்றி நினைத்ததை முடிக்கும் நபராகப் பாலஸ்தீன மக்களிடையே அவர் பெயர் எடுத்தவர்.