பாராளுமன்றத்தை கலைத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் காலிமுக அரகலய போராட்டத்தை பாராளுமன்றத்திற்கு திருப்ப முயற்சித்தோம் – அனுர திஸாநாயக்க
காலி முகத்திடல் செயற்பாட்டாளர்களை பாராளுமன்றம் நோக்கி திருப்புவதற்கு கே.டி.லால்காந்த பாராளுமன்றத்தை கலைத்து புதிய வாக்கெடுப்புக்கு வாய்ப்பளிக்க முயற்சித்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்று இருந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இருக்கவில்லை என்றும், லால்காந்தவின் அறிக்கையை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
உண்மையான ஜனநாயகத்திற்காகப் பாடுபட வேண்டும் என்பதையே அந்தத் தருணத்தில் தமது கட்சி எதிர்பார்த்ததாகக் கூறிய அவர், அதற்காகக் குரல் எழுப்பும் தமது கட்சியை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்கூத்தானது என்றார்.
காலிமுகத் திடல் செயற்பாட்டாளர்களை பாராளுமன்றம் நோக்கி திருப்பும் முயற்சிகள் தோல்வியடைந்ததாக லால்காந்த தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.