ஒன்பது மீனவர்களில் ஆறு பேருக்கு விடுதலை: மூவருக்கு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
புதுக்கோட்டை மீனவர்கள் ஒன்பது பேரில் ஆறு பேரை இலங்கை நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களைக் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பில் புதுக்கோட்டை மீனவர்களில் 6 பேரை விடுதலை செய்தும் இருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நால்வர் சென்ற படகின் உரிமையாளருக்கும் ஓட்டுநருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மீனவர்கள் சென்ற படகின் உரிமையாளரும் ஓட்டுநரும் ஒரே நபர் என்பதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.