வங்கதேச மஹ்மூத் யூனுஸின் இடைக்கால அரசுக்கு மோடி வாழ்த்து!
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றதில் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்து சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் புதிய இடைக்கால அரசு வங்கதேசத்தை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என அமைச்சர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இரு தரப்பினரின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய பின் , ஏற்பட்ட இராணுவ ஆட்சியை நிராகரித்து போராட்டக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரானார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யூனுஸ், பங்களாதேஷ் பொருளாதார நிபுணர் மற்றும் சமூக தொழில்முனைவர் மற்றும் ஹசீனாவின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார்.