கெட்ட வார்த்தையில் திட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சமீபத்தில் பேட்டி ஒன்றிய பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார்.

அதில் கூறும் பொழுது வட சென்னை திரைப்படத்தில் தனுஷை ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்று காட்சி இருக்கும்.

அந்த காட்சி குறித்து என்னிடம் கூறும் பொழுது எனக்கு அதிக அதிர்ச்சியாக இருந்தது. உடல் எல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது எப்படி இவ்வளவு பேருக்கு நடுவில் கெட்ட வார்த்தைகள் பேசுவது என்று யோசித்தேன். ஆனால் இந்த படத்தின் வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்றும் நினைத்தேன் எனவே ஒரு ஒன்றரை நிமிடம் தொடர்ந்து கெட்ட வார்த்தையிலேயே பேசினேன்.

அதை படம் பிடித்த கேமராமேன் கைதட்டி என்னை பாராட்டினார். முதன் முதலாக கெட்ட வார்த்தைக்காக கைதட்டு வாங்கி பாராட்டு வாங்கியது அதுதான் முதல் தடவை என்று கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Leave A Reply

Your email address will not be published.