காஷ்மீர் கதுவா தாக்குதல்: தீவிரவாதிகளின் உருவப்படம் வெளியீடு.
கடந்த ஜூலை 8ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்ட மலைப் பகுதிகளில் ராணுவ சுற்றுக்காவல் படையினர் பணியில் இருக்கும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஓர் அதிகாரி உட்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களே அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட கதுவா மாவட்ட மலைப் பகுதியில் கடைசியாகக் காணப்பட்ட நான்கு தீவிரவாதிகளின் உருவப்படங்களை ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
மேலும் இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் வெகுமதி அளிப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.