பதவி விலகாவிட்டால் வீடுகளுக்கு தீ வைப்போம் : தலைமை நீதிபதி ராஜினாமா.
‘மாற்றத்திற்கு எதிரான மாணவர்கள்’ இயக்கத்தின் மாணவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலகாவிட்டால் நீதிபதிகளின் வீடுகளுக்கு தீ வைப்போம் என்று மிரட்டல் விடுத்ததை அடுத்து, பங்களாதேஷ் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் தனது பதவியை ராஜினாமா செய்ததுள்ளார் என , சட்ட, நீதி மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் ஆலோசகர், பேராசிரியர் ஆசிப் நஸ்ருல் நேற்று (10) அறிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் கட்டிடம் மற்றும் நீதிமன்ற பதிவுகள், உச்ச நீதிமன்ற மைதானங்கள், நீதிபதிகளின் வீடுகள் மற்றும் நீதிபதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாக பேராசிரியர் ஆசிப் தெரிவித்தார்.
மேலும், பிரதம நீதியரசருடன் 5 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் நஸ்ருல் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நீதிபதி பதவி விலகுவதற்கு முன், நீதித்துறையின் மாண்பைக் காக்க முடிவெடுக்க வேண்டும் என்றும், ‘மாற்றத்திற்கு எதிரான மாணவர்கள்’ இயக்கத்தின் மாணவர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்றும் பேராசிரியர் நஸ்ருல் கூறியிருந்தார்
புதிய இடைக்கால அரசை கலந்தாலோசிக்காமல் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆயத்தம் என்றும், தலைமை நீதிபதி முன்னாள் பிரதமரின் ஆதரவாளர் என்றும், ‘மாற்றத்திற்கு எதிரான மாணவர்கள்’ இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஷேக் ஹசீனா, நேற்று முன் தினம் காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டில் , அனைத்து நீதிபதிகளை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார்.
இதன் மூலம் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், சதிக்குப் பொறுப்பேற்று அன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் தலைமை நீதிபதி மற்றும் 5 மேல்முறையீட்டுப் பிரிவு நீதிபதிகளை பதவி விலகுமாறு அறிவித்து, ஒரு மணி நேரம் அவகாசம் அளித்தனர். ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலகாவிட்டால் நீதிபதிகளின் வீடுகளுக்கு தீ வைப்போம், நீதிமன்ற ஆவணங்களை அழிப்போம் என போராட்டக்காரர்கள் மிரட்டினர்.
போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை முற்றுகையிட வருவதை அறிந்த தலைமை நீதிபதி உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறி கூட்டத்தை ரத்து செய்தார். பின்னர், பிற்பகல் 2.00 மணியளவில், தலைமை நீதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். அறிவிக்கப்பட்ட பின்னர், போராட்டக்காரர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர், பின்னர் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் தனது ராஜினாமாவை நீதித்துறை அமைச்சகம் மூலம் வங்காளதேச அதிபரிடம் சமர்ப்பித்தார்.