பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் – இடைக்கால அரசாங்கம் வருத்தம்
பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம், நாட்டின் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு பங்களாதேஷில் சிறுபான்மைச் சமூகத்தின் மீது தாக்குதல் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திருவாட்டி ஹசினாவுக்குப் பேராதரவளித்த சிறுபான்மையினரின் வீடுகள், கோயில்கள், வர்த்தக நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன.
கொடூரமான தாக்குதல்களுக்கு முடிவு கட்டும் வழிகள் ஆராயப்படும் என்று பங்களாதேஷ் இடைக்கால அமைச்சரவை கூறியது.
சில வாரங்களாய் நீடித்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பொது நிதி வழங்கவும் அது உத்தரவிட்டது.