ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த நாட்டுக்கு வரும் விமானப் பயணிகளில் அதிகரிப்பு எதுவுமில்லை.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள செப்டெம்பர் 21ஆம் திகதி வரை இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படவில்லை என விமான நிலைய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு விமான நிறுவனமும் தமது நிறுவனத்தின் மேலதிக விமானங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பல தனியார் விமானங்கள் இலங்கை ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர வேறு எந்த கூடுதல் விமானங்களும் வரும் நாட்களில் இலங்கைக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
அதன்படி, கடந்த வருடம் இந்த நேரத்தில் வந்து சென்ற அதே எண்ணிக்கையிலான பயணிகளை கையாள இலங்கை விமான நிலையங்கள் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.