நோய்த்தாக்கம் அதிகரித்தால் நாடெங்கும் ஊரடங்கு அமுல்!
நோய்த்தாக்கம் அதிகரித்தால்
நாடெங்கும் ஊரடங்கு அமுல்!
– பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று பதிலளித்துள்ளார்.
இதன்போது அவர் கூறியதாவது:-
“நாட்டில் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குத்தான் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் எண்ணம் தற்போது இல்லை. எனினும், கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் அதிகரித்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இன்று இரவுக்குள் அது பற்றி தீர்மானம் எடுக்கப்படும்” – என்றார்.