எனக்கு வாக்களித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்..- தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சஜித் தெரிவித்த தகவல்.

தாம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் கட்சி பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

தமிழ் கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் குழுவொன்று ஜனாதிபதி வேட்பாளராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த பின்னர் , தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாகாண சபை முறைமையை பயன்படுத்தி அந்த மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட படையொன்றை உருவாக்கி தனது நேரடிக் கண்காணிப்பில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

இதன்காரணமாக சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு கோரிய போதிலும் கலந்து கொண்ட தமிழ் கட்சி பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அடைக்கலநாதன் MP தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.