பிள்ளையானின் பெயரை பாவித்து மாணவிகளை வன்புணர்வு செய்யும் காமுக ஆசிரியர் (Video)
மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகளை வன்புணர்வு செய்யும் காமுக ஆசிரியர் குறித்து பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய இராசமாணிக்கம்!
ஜனாதிபதி செயலாளரின் உத்தரவைக் கூட கருத்தில் கொள்ளாத மட்டக்களப்பு பொலிஸார்!
ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை புறக்கணித்து செயல்படும் , பிள்ளையானின் கட்சி அமைப்பாளர்களில் ஒருவரான , மட்டக்களப்பில் உள்ள முன்னணி தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியரான கோபிநாத் என்ற ஆசிரியர் செய்யும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனாக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கடந்த 07ம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்து வரும் ஆசிரியர் பிள்ளையானின் அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்திற்கு அப்பால் சென்று பொலிஸாரை செயல்பட விடாமல் தடுக்கும் அளவுக்கு அவர் பலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளி மாணவியை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக , அந்தக் மாணவி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆசிரியர் உடனடியாக கைது செய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை 12ம் தேதி ஜனாதிபதி செயலகம் போலீசாருக்கு செய்தி அனுப்பியது. ஆனால் இன்று வரை போலீசார் அவரை கைது செய்யவில்லை.
அவர் வழக்கறிஞர் மூலம் சரணடைவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். அது காவல்துறையின் கடமையல்ல. கோபிநாத் என்ற நபர் பிள்ளையான் கட்சியின் அமைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகிறார்.
கலை பிரிவில் இரண்டு மாணவிகள் உள்ளார்கள். ஒரு மாணவி வராத போது, நான் சொல்வது போல நீ நடந்துக்காவிட்டால் உனக்கு இன்னும் பிரச்சனை வரும் என வெருட்டுவதாக தெரிவிக்கிறார்.
கல்வி அமைச்சு தலையிட்டு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலே உள்ள செய்தி
lankasara சிங்கள செய்திஇணைய தளத்தில் வெளியானதாகும்.
அதன் பின்னணியில் சமுதித்த நடத்தும் TruthwithChamuditha வில் மாணவிகள் சீர்கேடு தொடர்பான விவாதத்தில் அநேக விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதில் குறிப்பிட்ட ஆசிரியர் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் சித்திர பாடம் நடத்தும் ஆசிரியராக பணிபுரிவதாகவும் , அவரது அரசியல் பலத்தை பயன்படுத்தி மாணவிகளை தனது காமுக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக United Humanright Organisiation இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய , சமுதித்தவுடனான நேர் காணல் வீடியோவில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மாணவி , நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பின்னரே இவை வெளியே தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார்.
தனமல்வில பாடசாலை மாணவி கூட்டு வன்புனர்வு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 22 பேர் கைதாகியுள்ள நிலையில் , இவ்விடயமும் பேசுபொருளாகியுள்ளது. இவை போன்ற விடயங்கள் பாடசாலைகளில் தொடருமானால் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயின்ற முதுநிலை மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது போன்ற நிலை உருவாகலாம் எனும் அச்சம் உருவாகி வருகிறது.
TruthwithChamuditha வீடியோ