அவுஸ்திரேலியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகரும், ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஹிமாலி அருணதிலகவுக்கு, அபராதம் விதிப்பு.

அவுஸ்திரேலியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகரும், ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஹிமாலி அருணதிலகவுக்கு, தனது வீட்டுப் பணிப்பெண்ணை அடிமையாகப் பயன்படுத்தியமை தொடர்பில், அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் 5,48,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டுப் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டை கையகப்படுத்தி, ஒரு மணித்தியாலத்திற்கு 75 சத சம்பளத்தில் அடிமை போல நடத்தியமைக்காக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகரும் , 2023 ஆம் ஆண்டு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டவருமான ஹிமாலி அருணதிலகவுக்கு , ஆஸ்திரேலியாவின் பெடரல் கோர்ட் தண்டனை வழங்கியுள்ளது.

ஹிமாலி அருணதிலகவுக்கு, அவரது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் வட்டியாக $5,48,000 டாலர்களை உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதி உயர் ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலக, ஆஸ்திரேலிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அவரது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு $5,48,000 செலுத்தப்படாத ஊதியம் மற்றும் வட்டியாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் தற்போது வேலைவாய்ப்பு சட்டத்தை மீறியதற்காக மிகப்பெரிய அபராதத்தை எதிர்கொள்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.