அதிகமாக சம்பாதிக்கக் கூடிய அமைச்சு பதவி தருவதாக சஜித் , பதியுதீனுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது – இஷாக் ரஹ்மான்.
நல்ல பணம் சம்பாதிக்கக்கூடிய அமைச்சு ஒன்றை வழங்குமாறு சஜித் பிரேமதாசவிற்கு றிசாத் பதியுதீன் நிபந்தனைகளை வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான அவர், அடுத்த பாராளுமன்றத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பல நிபந்தனைகளை முன்வைத்து பதியுதீன் , சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சுக்கள் நல்ல முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் தாம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியைச் சேர்ந்த மூவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.