Famous Amos தின்பண்டங்களை உருவாக்கிய வாலி ஏமஸ் காலமானார்.

Famous Amos தின்பண்டங்களை உருவாக்கிய வாலி ஏமஸ் காலமானார்.

அவருக்கு வயது 88. அவருடைய பிள்ளைகள் அந்தச் செய்தியை வெளியிட்டதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மறதி நோயால் ஏமஸ் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.கறுப்பு அமெரிக்கர்களுக்கு முன்மாதிரியாய் அவர் இருந்ததாக ஏமஸின் பிள்ளைகள் கூறினர்.

ஏமஸ் தின்பண்டங்கள் கடையை 1975ஆம் ஆண்டில் தோற்றுவித்தார்.

குடும்பத்தின் கைப்பக்குவத்தில் உருவான அவை நாளடைவில் ஹாலிவுட் நட்சத்திரங்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்த்தன.

அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் டாலாஹாசீ ( Tallahassee) எனும் நகரில் ஏமஸ் பிறந்தார்.

முதலில் சம்பாதிப்பதற்காகத் தின்பண்டங்கள் செய்யத் தொடங்கியதாக Detroit Black Journalஉக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

அதைச் செய்வதில் தமக்கு அளவில்லா மகிழ்ச்சி என்றார் அவர். அதன் பிறகு தின்பண்டங்களுக்கான ஒரு சாம்ராஜ்யத்தை ஏமஸ் உருவாக்கினார்.

நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவர் 1988ஆம் ஆண்டில் Famous Amos வியாபாரத்தைத் தனியார் நிறுவனத்திடம் விற்றார்.

இப்போது Amos family and Ferrero குழுமம் Famous Amos தின்பண்டங்களின் உரிமையாளராக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.